தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்று பாம்பன் கடற்கரையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இன்று பாம்பன் கடற்கரையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இன்று பாம்பன் கடற்கரையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2024 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம் : மத்திய அரசைக் கண்டித்து இன்று (பிப்.27) ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் மீனவர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:

சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வாழ்வாதாரமாக உள்ள படகுகளை சிறை பிடிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேருக்கு 6 மாதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த செயலுக்காக இலங்கையை மத்திய அரசு கண்டிக்கவோ, மீனவர்களை மீட்கவோ அக்கறை காட்டவில்லை. மத்திய அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று பாம்பனில் மீனவர் காங்., சார்பில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இதில் தமிழக காங்., கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, காங்., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.

மேலும் பிப்.28ல் குலசேகரப்பட்டினத்தில் பிரதமர் மோடிக்கு எதிராககருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us