/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் காங்., கட்சி நடை பயணம்
/
பரமக்குடியில் காங்., கட்சி நடை பயணம்
ADDED : அக் 04, 2024 04:34 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில் பரமக்குடியில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது.
முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, ஜோதி பாலன், ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தனர். அப்துல் அஜீஸ் வரவேற்றார்.
மாநில நிர்வாகிகள் ஆலம், கோதண்டராமன், ஆனந்தகுமார் பேசினர். தொடர்ந்து தியேட்டர் பகுதியில் துவங்கிய ஊர்வலம் சந்தை கடை, பஸ் ஸ்டாண்ட், ஆர்ச் வழியாக காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., வெறுப்பு அரசியலை முறியடிப்போம் என கோஷம் எழுப்பினர்.
மகளிர் நிர்வாகி ராமலட்சுமி, வக்கீல் அணி இளமுருகன் மற்றும் நகர், வட்டார தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.