ADDED : மார் 09, 2024 08:27 AM
அ நிறம் | அளவு
கமுதி : -கமுதி அருகே முத்தாதிபுரத்தில் முத்து விநாயகர், பத்ரகாளிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி மிருதயஞ்சய ஹோமம், நவகிரஹ ஹோமம், மகா சங்கல்பம், சுதர்சன ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
புண்யாக வாசனம், சோமபூஜை, இரண்டாம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டிற்கு பின் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
முத்து விநாயகர், பத்ரகாளி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை முத்தாதிபுரம் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.
