/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் நவ.,2ல் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நவ.7ல் சூரசம்ஹாரம்

ADDED : அக் 23, 2024 04:44 AM
பரமக்குடி, : பரமக்குடி முருகன் கோயில்களில் நவ.2ல் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 7 ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவ.2 இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்க உள்ளது. தினமும் இரவு 8:00 மணிக்கு சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு சேவை சாதித்து மகாதீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து நவ.7 மாலை 4:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி சக்திவேலுடன் வீதி வலம் வருகிறார். அன்று இரவு 7:00 மணிக்கு வைகை ஆற்றங்கரையில் சூரசம்ஹார லீலையில் முருகன் சூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் நவ.8 காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்கின்றனர். அதே போல் பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடக்க உள்ளது.