/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளக்காதலால் கணவனை கொல்ல சதி: மனைவி உட்பட 3 பேர் கைது
/
கள்ளக்காதலால் கணவனை கொல்ல சதி: மனைவி உட்பட 3 பேர் கைது
கள்ளக்காதலால் கணவனை கொல்ல சதி: மனைவி உட்பட 3 பேர் கைது
கள்ளக்காதலால் கணவனை கொல்ல சதி: மனைவி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜன 19, 2025 11:14 PM

தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொல்ல கூலிப்படைக்கு பணம் கொடுத்து சதி திட்டம் தீட்டிய மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.
தேவிபட்டினம் ரெகுநாதபுரம் அருகே தெற்கு கும்பரத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் ஒப்பந்ததாரர் லட்சுமணன் 49. இவரது மனைவி கோட்டைஈஸ்வரி 41. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கோட்டை ஈஸ்வரி உச்சிப்புளி அருகே உள்ள இறால் பண்ணையில் வேலை செய்கிறார். அங்கு மேலாளராக பணிபுரியும் ஒடிசா சோனாப்பூரைச் சேர்ந்த சக்திகுமார் பிஜியுடன் 31, கோட்டைஈஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இது லட்சுமணனுக்கு தெரிய வந்தது.
இதனால் வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள லட்சுமணனை தீர்த்து கட்ட சக்திகுமார் பிஜி மூலம் கோட்டை ஈஸ்வரி சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சக்திகுமார் பிஜி, தொண்டி கூலிப்படையைச் சேர்ந்த கவுதமிடம் 34, கோட்டை ஈஸ்வரி கொடுத்த அட்வான்ஸ் தொகை ரூ.70 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமணனை அலைபேசியில் தொடர்பு கொண்ட கவுதம், ''உங்களை கொலை செய்வதற்கு உங்கள் மனைவி அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளார். நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நீங்கள் கூடுதல் பணம் கொடுத்தால், கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டி விடுகிறேன்,'' எனக்கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியுற்ற லட்சுமணன் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். இதையடுத்து கோட்டை ஈஸ்வரி, கவுதம், பிரதீபன் 30, ஆகியோரை தேவிபட்டினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சக்திகுமார் பிஜிவை தேடி வருகின்றனர்.