ADDED : நவ 27, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசியலமைப்பு தின விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் மலைச்சாமி, ஆலிஸ் முன்னிலை வகித்தனர். இந்திய அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உறுதிமொழி எடுத்தனர். மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

