/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரிகளில் அரசியல் சாசன உறுதியேற்பு
/
கல்லுாரிகளில் அரசியல் சாசன உறுதியேற்பு
ADDED : நவ 28, 2024 04:57 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் பொறியியல்கல்லுாரியில் அரசியலமைப்பு சட்ட உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதியேற்பு எடுத்தனர். செய்யதுஅம்மாள் பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் உறுதியேற்பு எடுத்தனர்.
அதன் பின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் பெரியசாமி, துறைத்ததலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
-------*ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் அரசியல்சாசன தினம் கடை பிடிக்கப்பட்டது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்றார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கோகிலா பங்கேற்று இந்திய ஜனநாயக சட்டத்தை குறிப்பிட்டு சட்டத்தால் கிடைக்கும் மனித உரிமைகள், பெண்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், சமூக ஊடகத்திற்கான சட்டங்கள் குறித்து விளக்கினார்.
கல்லுாரி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் காசிநாததுரை சட்டங்கள் வழியாக அனைவரும் ஆற்றும் கடமைகளை விளக்கி பேசினார். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானஸ் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லுாரியின் உள் தர உறுதிப்பாட்டு குழு செயலாளர் பேராசிரியர் தமிழகன் நன்றி கூறினார். தமிழ்துறை பேராசிரியர்கள் சுந்தரபாண்டியன், சரிதாராணி தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.