/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி தொய்வு: அதிகாரிகள் அலட்சியம்
/
மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி தொய்வு: அதிகாரிகள் அலட்சியம்
மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி தொய்வு: அதிகாரிகள் அலட்சியம்
மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி தொய்வு: அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மார் 17, 2024 12:43 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் இரண்டு மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிகள் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
தினைக்குளம் அருகே மொங்கான் வலசை மற்றும் ஊராட்சி அலுவலகம் அருகே புதியதாக 10 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் ஆமைவேகத்தில் நடக்கிறது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இப்பணியில் நான்கு துாண்கள் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில் முறையாக சிமெண்ட் பூச்சுக்களில் தண்ணீர் ஊற்றாததால் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது:
ரூ.8லட்சத்தில் தலா இருமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தண்ணீர் ஊற்றி அவற்றை முறையாக கட்டுமானம் செய்யாமல் விட்டுள்ளனர்.
இதனால் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் விரைவிலேயே சேதமடையும் அபாயம் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றனர்.

