தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி வைகை ஆற்றில் கொட்டி அள்ளப்படும் கட்டுமான கழிவுகள்

 பரமக்குடி வைகை ஆற்றில் கொட்டி அள்ளப்படும் கட்டுமான கழிவுகள்

 பரமக்குடி வைகை ஆற்றில் கொட்டி அள்ளப்படும் கட்டுமான கழிவுகள்


ADDED : பிப் 25, 2026 08:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 08:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீர் வழித்தடம், மண் உறிஞ்சும் திறன் பாதிப்பு

பரமக்குடி: பரமக்குடி வைகையில் அனைத்து படித்துறைகளிலும் கட்டடக் கழிவுகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கொட்டி அள்ளப்படுவதால் ஆற்றின் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.

பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளுடன் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகையுடன் விளங்குகிறது. வைகை ஆற்றை மையமாகக் கொண்டு நகர் உருவாகி இருக்கிறது. வற்றாத ஜீவ நதியாக இருந்த வைகை தற்போது மழை பெய்யும் நாட்களில் மட்டும் தண்ணீர் கடந்து செல்கிறது.

இந்த ஊற்று நீர் பரமக்குடி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உதவுகிறது.

தொடர்ந்து சில ஆண்டுகளாக வைகை ஆறு பராமரிப்பின்றி கழிவு நீர் கலப்பது, செடி, கொடிகள் முளைப்பது, மணல் கொள்ளையால் பாதிப்பு என தன்னிலை மாறி உள்ளது. இந்நிலையில் வைகையின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு ஆற்றின் அகலமும் குறைந்து இருக்கிறது.

இத்தனைக்கும் மத்தியில் ஒவ்வொரு படித்துறையிலும் கட்டடக் கழிவுகள், கட்டுமானப் பொருட்களை கொட்டுவது மற்றும் ரோடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் ஜல்லி கற்களைக் கொட்டி அள்ளுவது என இலவசமாக இடத்தை பயன்படுத்துகின்றனர்.

இதனால் மண்ணின் தன்மை கடினமாகி நீரின் உறிஞ்சி திறன் பாதிக்கப்படுகிறது.

மேலும் தண்ணீர் வரும் காலங்களில் நீரின் வழித்தடம் மாறி ஒட்டுமொத்த நீர் ஊற்றுக்கும் இது போன்ற செயல்கள் எமனாகி இருக்கிறது.

ஆகவே அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றின் துாய்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us