/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுமானப் பணி
/
கீழக்கரையில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுமானப் பணி
கீழக்கரையில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுமானப் பணி
கீழக்கரையில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுமானப் பணி
ADDED : ஜூன் 27, 2025 11:39 PM
கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதிகளில் அதிகளவு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வருகின்றன. இது குறித்து கீழக்கரை நகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் பேசினர்.
கீழக்கரையில் நோய் பரப்பும் நிலையில் உள்ள நாய்கள் மற்றும் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஏ.பி.சி., எனப்படும் நாய்கள் கருத்தடை மையம் கட்டுமான பணிகள் நடக்கிறது. நவ., மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் பள்ளமோர்க்குளம் பகுதியில் ரூ.55 லட்சத்தில் பணிகள் நடக்கிறது. டிச., மாத இறுதிக்குள் கட்டுமான பணிகள் நிறைவுற்று, கருத்தடை மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ., மூலமாக கருத்தடை மையம் செயல்படும் என்றனர்.