/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை- தோட்டாமங்கலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது
/
திருவாடானை- தோட்டாமங்கலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது
திருவாடானை- தோட்டாமங்கலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது
திருவாடானை- தோட்டாமங்கலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது
ADDED : செப் 20, 2025 03:44 AM

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை- தோட்டாமங்கலம் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கியது.
திருவாடானையில் இருந்து மகாலிங்கபுரம், சூச்சனி, திருவடிமதியூர் வழியாக தோட்டாமங்கலம் செல்லும் தார் ரோடு மிகவும் சேதமடைந்தது.
மழை காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் பல முறை படத்துடன் செய்தி வெளியானது. மேலும் தினமலர் நாளிதழில் 'தினமும் ஒரு ரோடு' புகைப் படத்திலும் வெளியானது. தொடர்ந்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி, படம் எதிரொலியாக தற்போது ரோடு அமைக்கும் பணிகள் துவங்கியது. நேற்று இயந்திரம் மூலம் பணிகள் நடந்தது.