/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டட தொழிலாளி வெட்டி படுகொலை * நீதிமன்றம் சென்று திரும்பியவருக்கு நடந்த கொடூரம்

ADDED : ஜூன் 13, 2025 01:26 AM
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சொத்து பிரச்னை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பிய கட்டடத்தொழிலாளி செல்வராஜ் 41, வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய தச்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கட்டடத் தொழிலாளியான இவர் ஏர்வாடி முத்தரையர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு முனியம்மாள், அபிராமி என இரு மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவி முனியம்மாளின் மகன் மணிகண்டனுக்கும் 22, தந்தை செல்வராஜுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் காலை சொத்து பிரச்னை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் செல்வராஜ் ஆஜராகி விட்டு இரவு 8:00 மணிக்கு வீட்டில் ஓய்வு எடுத்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்வராஜை அரிவாள் மற்றும் கத்தியால் தலை மற்றும் உடல் பகுதியில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் அங்கு வந்தனர்.
செல்வராஜ் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்வராஜ் கொலை தொடர்பாக அவரது முதல் மனைவி மகன் மணிகண்டனை பிடித்து ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர். மணிகண்டன் மீது ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.