/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டடத் தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
கட்டடத் தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 10:29 PM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ தலைவர் ராஜன், தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். இதில் கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டம், நலவாரிய வசூல் சட்டங்களை கலைக்க கூடாது. முறையாக செயல்படுத்த வேண்டும்.
நலவாரியம் வழியாக இ.எஸ்.ஐ., வசதி, காப்பீடு, பி.எப்., பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.6000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் முருகையா, சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

