/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்
/
பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்
பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்
பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : டிச 25, 2024 08:26 AM
ராமநாதபுரம் : கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வலியுறுத்தி தொழிலாளர் நல அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனுடன் தொழிலாளர்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளனர்.
தொழிலாளர் நல அலுவலகம் முன்பு நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்படும் போது ரூ.5000 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்க வேண்டும்.
பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி பணப்பலன் கிடைத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தி குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டிச.27ல் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.