ADDED : செப் 16, 2026 03:42 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலார்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்தனம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் லுார்து ரூபி கூறியதாவது:
கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸ் ரூ.5000 வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3000, தொழிலாளர்களின் இயற்கை மரணத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். அதே போல் பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்திற்கென முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலியாக பணிபுரிவோருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசின் குறைந்தப்பட்ச ஊதியக்குழுவில் சி.ஐ.டி.யு.,வை புறக்கணிக்க கூடாது என்றார். கட்டுமான தொழிலாளர் சங்க பொருளாளர் கருப்பசாமி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். –––
