/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 வேண்டும்
/
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 வேண்டும்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 வேண்டும்
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 வேண்டும்
ADDED : ஜூன் 21, 2025 11:27 PM
பரமக்குடி கூட்டத்தில் தீர்மானம்
பரமக்குடி:பரமக்குடியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடந்தது.
கட்டுமான மத்திய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா மத்திய சங்க மாவட்ட தலைவர் நாகசாமி முன்னிலை வகித்தார். கொழுவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் உதயசூரியன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி வாழ்த்தினர். மாநில பொதுச் செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெகதீசன், நாகலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 60 வயது பூர்த்தி அடைந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.1200 ஓய்வூதியத்தை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் நடைமுறைகளை எளிமை படுத்த வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் அரசு கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.