/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வட்டார விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்
/
வட்டார விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 13, 2025 03:50 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாயிகள் ஆலோசனைக் குழு தலைவர் பூபதிமணி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் கேசவராமன் முன்னிலை வகித்தார். அவர் பேசியதாவது:
முதுகுளத்துார் வட்டாரத்தில் விதைப்பு பணி துவங்கி விட்டதால் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மழையை நம்பி சாகுபடி செய்யப்படுவதால் விவசாயிகளும் குறைந்தளவு தண்ணீரை கொண்டு வளரக்கூடிய பயிர்களான குதிரைவாலி, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.
வேளாண் அலுவலர் தமிழ் அகராதி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பிரதீபா, உதவி தொழில்நுட்ப மேலாளர் இந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.