நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரில் ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா அறக்கட்டளை தலைவர் கண்ணதாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குருநாதர் திருமால், துணை குருநாதர் புயல்நாதன் முன்னிலை வகித்தனர். அப்போது ஏப்.,11ல் நடைபெற்ற கும்பாபிஷேகம் வரவு, செலவுகள் காண்பிக்கப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. 48 நாள் மண்டல பூஜை, சிறப்பு பூஜை நடத்துவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.