/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்டசபை தேர்தல் கட்சியினருடன் ஆலோசனை
/
சட்டசபை தேர்தல் கட்சியினருடன் ஆலோசனை
ADDED : அக் 31, 2025 12:19 AM
திருவாடானை:  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்க உள்ள நிலையில் கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திருவாடானை சட்டசபை தொகுதிக்கான கூட்டம் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. திருவாடானை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் காசி தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆண்டி, ராமமூர்த்தி, அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலுவலர்கள் விளக்கி பேசினர்.  வீடு, வீடாக ஆய்வு செய்து படிவம் வழங்குதல், அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் பெறுதல், இதற்கான அவகாசம், பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கான நடைமுறை, பெயர் நீக்கப்படும் போது நோட்டிஸ் வழங்குதல் நடைமுறைகள் குறித்து விளக்கினர். கட்சி பிரமுகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

