/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக நிர்வாகிகள் தேர்வு
/
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 23, 2025 04:30 AM

பரமக்குடி : பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக பொதுக்குழு கூட்டம் ஏ.வி., மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
தலைவர் மாதவன் தலைமை வகித்தார். 2024--25ம் ஆண்டு செயல் அறிக்கை, நிதி அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து 2025--26ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சேகர், செயலாளர் புரோஸ்கான், இணைச்செயலாளர் கோவிந்தன், பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், ராமமூர்த்தி, முகமது ஷாஜகான், சித்தார்த்த சூர்யா, நாகராஜன், சியாமளா கவுரி தேர்வு செய்யப்பட்டனர். உள் தணிக்கையாளர்கள் அழகர்சாமி, ரத்தினவேல் நியமிக்கப்பட்டனர்.
அப்போது நகரில் நிலவும் நாய்த் தொல்லையை போக்க நடவடிக்கை எடுத்தல், பரமக்குடி மாவட்ட கிளை நுாலகத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

