தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் தொடரும் சர்வர் பிரச்னை ஆதார் எடுக்க செல்வோர் பாதிப்பு

 சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் தொடரும் சர்வர் பிரச்னை ஆதார் எடுக்க செல்வோர் பாதிப்பு

 சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் தொடரும் சர்வர் பிரச்னை ஆதார் எடுக்க செல்வோர் பாதிப்பு


ADDED : மார் 04, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் ஆதார் கார்டு எடுக்கக்கூடிய சேவை மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆதார் கார்டு புதியதாக விண்ணப்பிக்கவோ அல்லது திருத்தம் செய்து பதிவேற்றம் செய்ய போஸ்ட் ஆபீஸ் சென்றால் நெட் இல்லை என்றும் சர்வர் பிரச்னையாக உள்ளது, இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது என தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் போக்கு நடக்கிறது.

பெருநாழி, கடலாடி, நரிப்பையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் தினசரி குறைந்தது 20 டோக்கன் கொடுத்து ஆதார் பதிவு செய்து விடுகின்றனர்.

ஆனால் சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் மட்டும் நெட் இல்லை சர்வர் இல்லை என ஏதாவது காரணத்தை சொல்லி பொதுமக்களை பள்ளி கல்லுாரி மாணவர்களை அலைக்கழிக்கின்றனர்.

சாயல்குடி பெரும் வணிகர் சங்க செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:

சாயல்குடி நகர் பகுதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் புதியதாக ஆதார் எடுக்கவும், திருத்தம் உள்ளிட்டவைகளை செய்வதற்கும் வந்தால் இன்டர்நெட் பிரச்னை என சொல்லி அலைக்கழிக்கின்றனர்.

எனவே கூடுதலாக இன்டர்நெட் சேவையை அளிக்கவும், பொது மக்களுக்கான சேவையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us