/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் தொடர் சாரல் மழை
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் தொடர் சாரல் மழை
ADDED : ஜன 01, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது.
ஆர். எஸ்.மங்கலம், செங்குடி, இருதயபுரம், சீனாங்குடி, ஆனந்துார், கூடலுார், நத்தக்கோட்டை, சனவேலி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் மகசூல் நிலையில் உள்ள நெற்கதிர்கள் மழையில் சேதமடைந்துள்ளன. மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெல் விவசாயிகள் அதிகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.