/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
10 கிராமங்களில் இரண்டு நாளாக தொடர் மின்தடை கிராம மக்கள் பாதிப்பு
/
10 கிராமங்களில் இரண்டு நாளாக தொடர் மின்தடை கிராம மக்கள் பாதிப்பு
10 கிராமங்களில் இரண்டு நாளாக தொடர் மின்தடை கிராம மக்கள் பாதிப்பு
10 கிராமங்களில் இரண்டு நாளாக தொடர் மின்தடை கிராம மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2025 11:38 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டாவது நாளாக மின்தடை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் , ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஆய்ங்குடி, திருத்தேர்வலை, பனிக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மழையால் அப்பகுதியில் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் மின்தடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இரண்டாவது நாளாக ஆய்ங்குடி, திருத்தேர்வலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். மின்தடைகளை சரி செய்வதில் மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்துவதாகவும், அப்பகுதி கிராம மக்கள் சார்பில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.