ADDED : மார் 27, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக காலை முதல் இரவு வரை அறிவிக்கப்படாத மின் தடை நீடிக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் வணிகர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தற்போது ரம்ஜான் நோன்பு காலங்களில் தொடர்ந்து 10 தடவைக்கு மேல் மின்தடை செய்யப்படுவதால் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே கீழக்கரை மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொடர் மின்தடையை சரி செய்யவும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.