/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேக்கேஜ் முறையிலான டெண்டர் ரத்து ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வரவேற்பு
/
பேக்கேஜ் முறையிலான டெண்டர் ரத்து ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வரவேற்பு
பேக்கேஜ் முறையிலான டெண்டர் ரத்து ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வரவேற்பு
பேக்கேஜ் முறையிலான டெண்டர் ரத்து ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வரவேற்பு
ADDED : ஜூலை 16, 2025 11:21 PM
கடலாடி: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் தமிழக முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது.
எம்.ஜி.எஸ்.எம்.டி., 2025-26 திட்டத்தில் கமுதி ஒன்றியத்தில் பேக்கேஜ் எண்: 6ல் 9 பணிகளும், கடலாடி ஒன்றியத்தில் பேக்கேஜ் எண்: 2ல் அடங்கிய 8 பணிகளும் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து சாலைகளும் முழு பேக்கேஜாக நிர்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
பேக்கேஜ் டெண்டர் என்பது அதிக எண்ணிக்கையில் உள்ள சாலைப் பணிகளை மொத்தமாக கையாளும் பணியாகும். இந்த நடைமுறை ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாக அமையும் என்றும் இதனை நம்பியுள்ள ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கமுதி, கடலாடி, முதுகுளத்துார் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கடலாடி ராமர், கமுதி கருமலையான், கங்காதரன், முதுகுளத்தூர் மோகன்தாஸ் ஆகியோர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் அனைத்து சாலைகளும் ஒரே நேரத்தில் பேக்கேஜ் முறையில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பயனடையும் வழக்கில் நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி வகுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டிருந்தது.
மாவட்ட நிர்வாகம் கடந்த மே 16ல் நடத்தியஒப்பந்த புள்ளியை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மூலம் தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டம் மற்றும் விதிகளை சுட்டிக்காட்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று அம்மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாளை முத்தரசு, அரசு தரப்பில் அஜ்மல்கான் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி ஜூன் 15ல் நடந்த பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர்நடத்தும்படி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றனர்.