/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'கூலி' பட இயக்குனர் ராமேஸ்வரத்தில் தரிசனம்
/
'கூலி' பட இயக்குனர் ராமேஸ்வரத்தில் தரிசனம்
ADDED : ஆக 13, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் 2, லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடித்த கூலி படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் நாளை வெளியாகிறது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வெற்றி பெற வேண்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த லோகேஷ் கனகராஜ், அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடினார்.
பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் தரிசனம் செய்தார். வழக்கமாக தனது பட ரிலீசிற்கு முன் இக்கோயிலில் தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.