/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு வார விழாவில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பர்; கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் அறிவிப்பு

ADDED : நவ 17, 2024 12:39 AM

ராமநாதபுரம்: -''கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பர்,'' என, ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் விஜய ராமலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கூட்டுறவு சங்க பதிவாளரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. கள அலுவலர்களுக்கு மனஉளச்சலை அதிகரிக்கும் வகையில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத அரசாணை 109ல் தெரிவிக்கப்படாத பணிகளை வலியுறுத்தும் பதிவாளர் செயல்முறை ஆணைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் காலி பணியிடங்கள் இருந்தும் பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆய்வாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி ஒதுக்கீடு வழங்க மறுத்து வருகிறார். பதிவாளரிடம் மாநில நிர்வாகிகள் நேரிலும், கடிதம் மூலம் விரிவாக எடுத்துரைத்தும் 3 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே முதல்வர், துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உணர்வுப்பூர்வமாக கொண்டாடும் கூட்டுறவு வார விழாவில் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி சாராத நிர்வாகம் சார்ந்த எங்களது கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்காவிட்டால் மாவட்ட அளவில் பணியாளர் ஆள் சேர்ப்பு பணிகளை முற்றிலும் புறக்கணிக்கவும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது----- என்றார்.