/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பணி முடிந்தும் கூகுள் மீட்: கண்டித்து கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 07, 2025 03:44 AM
ராமநாதபுரம்: கூட்டுறவு அலுவலக ஊழியர்களை பணிமுடிந்தும் மாலை 6:00 மணிக்கு மேல் கூகுள் மீட் மூலம் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வற்புறுத்துவதை கண்டித்து மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயராமலிங்கம் கூறியதாவது: கூட்டுறவுத்துறை அலுவலகங்களில் பணி நேரம் முடிந்து மாலை 6:00 மணிக்கு மேல் கூகுள் மீட் மூலம் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதை கண்டித்தும், தனியார் தொழில் முனைவோர் மூலம் நடத்தப்படும் முதல்வர் மருந்தகங்களுக்கு கூட்டுறவு சார்ப்பதிவாளர்களை பயன்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்கள் முன்பு இன்று (அக். 7) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.