/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜப்பான் நிறுவனத்துடன் பருத்தி விவசாயிகள் ஒப்பந்தம்
/
ஜப்பான் நிறுவனத்துடன் பருத்தி விவசாயிகள் ஒப்பந்தம்
ஜப்பான் நிறுவனத்துடன் பருத்தி விவசாயிகள் ஒப்பந்தம்
ஜப்பான் நிறுவனத்துடன் பருத்தி விவசாயிகள் ஒப்பந்தம்
ADDED : செப் 20, 2024 01:57 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி விளைந்து பஞ்சு எடுக்கும் நேரத்தில் அதன் விலை சரிவடைந்து கிலோ 45 ரூபாய்க்கு கமிஷன் மண்டியில் விலை போகிறது. இதனால், எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்கவும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தரமான பருத்தி பஞ்சு விற்பனை செய்வதற்கும், ஜப்பான் நிறுவனத்துடன் கமுதி சேது சீமை இயற்கை பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவன தலைவர் எஸ்.முத்துராமலிங்கம் கூறியதாவது:
அரசின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கீழ் எங்களது நிறுவனம் செயல்படுகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பருத்தி பஞ்சு விற்க, ஜப்பான் நாட்டு ஜிங்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மார்க்கெட் விலையை விடக் கூடுதலாக, 25 சதவீதம் வரை விலை கிடக்கிறது. நடப்பாண்டில் 100 ஏக்கர் வரை இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்ய உள்ளோம். அதற்குரிய தொழில்நுட்பப் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
இவ்வாறு கூறினார்.