/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி எடுக்கும் பணி மும்முரம்
/
முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி எடுக்கும் பணி மும்முரம்
முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி எடுக்கும் பணி மும்முரம்
முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி எடுக்கும் பணி மும்முரம்
ADDED : ஜூன் 01, 2025 11:04 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பருத்தி பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்தனர். அதற்கு அடுத்தபடியாக மிளகாய்,பருத்தி மற்றும் சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்தனர்.
அவ்வப்போது பெய்த மழையால் நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். முதுகுளத்துார் அருகே தேரிருவேலி, காக்கூர், கீழத்துாவல், ஏனாதி, பூக்குளம், நல்லுார், கீரனுார், புளியங்குடி, பொசுக்குடி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது பெய்த மழையால் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நெல், மிளகாய், பருத்தி விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கிலோ ரூ.55க்கு விற்பனை செய்வதால் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விளைந்த பருத்தியைக் கூட பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளனர்.
ஒரு சில விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து வேறு வழியின்றி பருத்தியை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்து காலதாமதம் செய்யாமல் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.