/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுவடை இயந்திரத்திற்கு கூட வாடகை கொடுக்க முடியவில்லை
/
அறுவடை இயந்திரத்திற்கு கூட வாடகை கொடுக்க முடியவில்லை
அறுவடை இயந்திரத்திற்கு கூட வாடகை கொடுக்க முடியவில்லை
அறுவடை இயந்திரத்திற்கு கூட வாடகை கொடுக்க முடியவில்லை
ADDED : ஜன 09, 2024 12:33 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் நெற்பயிர்கள்மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலையில் பல விவசாயிகள் அறுவடை இயந்திரத்திற்கு வாடகை கொடுக்க முடியாத அவலநிலை உள்ளது.
முதுகுளத்துார் வட்டாரத்தில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர். முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், காக்கூர், ஏனாதி, சாம்பக்குளம், அப்பனேந்தல், கருமல், நல்லுார், கீரனுார், புளியங்குடி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தனர்.
இரண்டு மாதத்திற்கு முன்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் நெற்பயிர்கள் வளரத் துவங்கியது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் முதுகுளத்துார் வட்டாரத்தில் நன்கு விளைச்சல் அடைந்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.முதுகுளத்துார் வட்டாரத்தில் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் வீணாகி நிலையில் நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒருசில விவசாயிகள் அறுவடை வாகனத்திற்கு பணம் கொடுக்க முடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கூலி ஆட்கள் வைத்து நெல் அறுவடை செய்கின்றனர். அடுத்த ஆண்டு விதை நெல்லுக்காக அறுவடை செய்வதாக விவசாயிகள் கூறினர்.
எனவே வேளாண் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.