/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்தமின்றி உயர்ந்த 6 சதவீத வரி விதிப்பால் மக்கள் அவதி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விரக்தி
/
சத்தமின்றி உயர்ந்த 6 சதவீத வரி விதிப்பால் மக்கள் அவதி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விரக்தி
சத்தமின்றி உயர்ந்த 6 சதவீத வரி விதிப்பால் மக்கள் அவதி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விரக்தி
சத்தமின்றி உயர்ந்த 6 சதவீத வரி விதிப்பால் மக்கள் அவதி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விரக்தி
ADDED : நவ 15, 2024 06:44 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் சத்தமின்றி உயர்த்தப்பட்ட 6 சதவீதம் வரி விதிப்பால் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விரக்தி தெரிவித்தனர்.
கீழக்கரை நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் அருள், கணக்காளர் உதயகுமார், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கணக்காளர் தமிழ்ச்செல்வன் தீர்மானங்களை வாசித்தார்.
கவுன்சிலர் பாதுஷா: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி 6 சதவீதம் எவ்வித சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளின் தரம் குறித்து உரிய முறையில் விளக்கம் தர வேண்டும். தனியார் கட்டடத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. பழைய மீன் மார்க்கெட் கட்டடம் மது பாராக செயல்படுகிறது என்றார்
கமிஷனர் அருள் : கீழக்கரை அரசு மருத்துவமனை ரூ.9 கோடியில் கட்டப்படும் நிலையில் அவற்றில் பயன்படுத்தப்படும் மணல், செங்கல், இரும்பு கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் உரிய முறையில் சரியானதாக உள்ளதா என அண்ணா பல்கலை தொழில்நுட்ப வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட மணல் தரமாகவே உள்ளது. இதற்கான ஆய்வு உரிய முறையில் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சூரியகலா, மார்க்சிஸ்ட் கம்யூ., : பழைய மீன் மார்க்கெட் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கவுன்சிலர் நஸ்ருதீன் : வார்டுகளில் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும். நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்கப்படுமா.
சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா : கொசு மருந்து ஒவ்வொரு வார்டு வாரியாக அடிக்கப்படுகிறது. நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. நாய்களை பிடிக்கும் போது 'ப்ளூ கிராஸ்' மூலம் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே ரூ.1 கோடியே 10 லட்சத்தில் நாய்களுக்கு புதிய கருத்தடை மையம் செயல்படுத்தப்படும்.
கவுன்சிலர் காசிம் மரைக்கா: ஒவ்வொரு கூட்டத்திலும் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நடைமுறையை இதுவரை முறையாக பின்பற்றுவதில்லை.
முகமது சுஐபு : கீழக்கரை நகராட்சியில் வரி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.
துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: டிச., மாதத்தில் அதிகளவு விசேஷ நிகழ்வுகள் கீழக்கரையில் நடக்கும். அதற்கான பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர் சேக் உசேன்: முறையாக கவுன்சிலர்களுக்கு பணிகள் குறித்த விபரங்களை தர வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.