/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு
/
திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு
ADDED : மே 31, 2025 11:19 PM
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு நாளை (ஜூன் 2) முதல் துவங்குகிறது.
திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.காம் தமிழ்வழி, பி.காம் ஆங்கில வழி பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து கலந்தாய்வு நாளை (ஜூன் 2) நடக்கிறது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் கூறியதாவது:
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக மே 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., பிரிவுகளுக்கு நாளை கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 4 ல் பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.ஏ. தமிழ், பாடப்பிரிவுகளுக்கும், மறுநாள் பி.காம். ஆங்கில வழிகல்வி, பி.காம் தமிழ் வழி, பி.எஸ்.சி. காட்சி தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறும் என்றார்.