/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூரில் மாடுகள் தொல்லை: பக்தர்கள் அவதி
/
திருவெற்றியூரில் மாடுகள் தொல்லை: பக்தர்கள் அவதி
ADDED : மார் 08, 2024 12:42 PM

திருவாடானை: திருவெற்றியூர் கோயில் மண்டபத்தில் மாடுகள் தொல்லையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இரவு தங்கி மறுநாள் சுவாமி தரிசனம் செய்வதால் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முதல் நாள் இரவில் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கியிருப்பார்கள்.
மறுநாள் அதிகாலையில் குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கோயில் வளாகங்களில் மாடுகள் உலா வருவதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
பக்தர்கள் கூறுகையில், மண்டபங்களில் படுத்திருக்கும் போது மாடுகள் பக்தர்களின் பைகளில் உள்ள பொருட்களை மேய்கின்றன. மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. கோயில் நிர்வாகத்தினர் மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

