/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விழிப்புணர்வு
/
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விழிப்புணர்வு
ADDED : மார் 18, 2025 10:39 PM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இணைய வழியில் நடடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.சமீப காலங்களில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்கின்றனர்.
ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், எஸ்.ஐ., சரவணக்குமார், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சுயம்புசெல்வன், சிவக்குமார், ஏட்டுகள் மாறன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், முகமது சதக் தஸ்தகீர் பள்ளி, மாவட்ட விளையாட்டு மைதானம், பழைய பஸ் ஸ்டாண்ட், அரண்மனை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இணையதளத்தின் மூலம் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். இணைய வழி குற்றங்கள் என்றால் என்ன, அவற்றை எப்படி தவிர்ப்பது, அதற்கான நடைமுறை குறித்து விழிப்புணர்வு படங்கள், குறும்படம், ஆகியவற்றை பொதுமக்கள் ஸ்கேன் செய்தால் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் குறியீடும் அந்த துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவர்களில் சைபர் கிரைம் குறித்து துண்டு பிரசுரங்களை ஒட்டினர்.