ADDED : ஜன 27, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில், திருவாடானை தாலுகாவில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
திருவாடானை தாசில்தார் ஆண்டி, திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பி.டி.ஓ., (ஊராட்சி) ஆரோக்கியமேரி சாராள் ஆகியோருக்கு விருது வழங்கபட்டது.
தொண்டி மரைன் நுண்ணறிவுப் பிரிவு ஏட்டு இளையராஜா, கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுப்பதில் காட்டிய விழிப்புணர்விற்காக விருதினைப் பெற்றார். விருது பெற்றவர்களை அதிகாரிகள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.

