நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் வாகைக்குளம் அக்னி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 25ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். முடிவில் முதுகுளத்துார் நியூ ஸ்டார் ராக்கர்ஸ் அணி முதல் இடம், அக்னி ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாம் இடம், சாத்தங்குடி அணி மூன்றாம் இடம், முதுகுளத்துார் கே.சி.சி., அணி நான்காம் இடமும் பெற்றது. வென்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை வழங்கப்பட்டது.