நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் நண்பர்கள் கிரிக்கெட் குழு சார்பில், நடைபெறும் கிரிக்கெட் போட்டியை, ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் துவங்கி வைத்தார்.
முன்னதாக, நண்பர்கள் கிரிக்கெட் குழு தலைவர் பகுருதீன், செயலாளர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றனர். மண்டல அளவில் நடைபெறும் டி 20 போட்டியில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர்.
8 நாட்கள் நடைபெறும் போட்டியில், முதல் பரிசாக ரூ 35 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ 15 ஆயிரம் என, 5 பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படுகின்றன.
முதல் போட்டியில், ராமநாதபுரம் போலீஸ் அணி வீரர்கள் பங்கேற்ற போட்டியில் எஸ்.பி., சந்தீஷ் விளையாடினார்.