ADDED : ஜூலை 10, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்குஇடையிலான 25 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட்போட்டியில் பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட்அணி தேர்வு நாளை (ஜூலை 12) காலை7:30மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டுஅரங்கில் நடக்கிறது.
இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,ஆதார் அட்டை , பிறப்புச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்,விளையாட்டு உபகரணங்களுடன் தேர்வில் பங்கேற்கலாம். மேலும்விபரங்களுக்கு 94431 12678 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன்தெரிவித்துள்ளார்.