/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம், சிவகங்கையில் குற்றங்கள் குறைந்துள்ளது டி.ஐ.ஜி., பா.மூர்த்தி பேட்டி

ADDED : ஏப் 16, 2025 08:42 AM
திருவாடானை : ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக ராமநாதபுரம் டி.ஐ.ஜி., பா.மூர்த்தி தெரிவித்தார்.
திருவாடானையில் அவர் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷன்களில் போதுமான போலீசார் பணியாற்றுகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் திருவிழாக்களின் போது மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து போலீசாரை கூடுதல் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளலாம்.
அது தவிர ஊர்க்காவல் படையினரும் பணியாற்றுவதால் தற்போது போலீஸ் பற்றாக்குறை இல்லை.
மக்கள் தொகை அடிப்படையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக இரண்டாக பிரிக்கலாம். ஆனால் தற்போது பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களில் தேவைக்கு அதிகமாக போலீசார் பணியாற்றுகின்றனர். ஆகவே இரண்டாக பிரிக்க வாய்ப்பில்லை.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே குற்றச் செயல்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படும். பழுதான கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர செயற்கை நுண்ணறிவு சேவைகளின் பயன்பாடு மூலம் குற்றங்களை தடுக்கும் பணிகள் நடைபெறும் என்றார். திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் உடனிருந்தார்.