தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயிர் சாகுபடி கணக்கெடுப்பு 60 சதவீதம் பணிகள் நிறைவு

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு 60 சதவீதம் பணிகள் நிறைவு

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு 60 சதவீதம் பணிகள் நிறைவு


ADDED : செப் 11, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு துவங்கி 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் பயிர்களின் விபரங்கள், சாகுபடி பரப்பளவு குறித்த துல்லியமான தகவல்களை மின்னணு முறையில் சேகரிக்கும் நோக்கில் பயிர் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. செப்.,30 க்குள் பணிகளை முடிக்க இருப்பதால் அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி கூறியதாவது:

தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு பருவத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. நேரடியாக வயல்களுக்கு சென்று விபரங்களை அலைபேசி செயலி மூலம் பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதுவரை 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தன்னார்வலர்களுக்கு அவர்கள் பதிவு செய்யும் விபரங்களின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரிந்த ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us