/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் சேதம்: கணக்கெடுப்பு துவக்கம்
/
பயிர் சேதம்: கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : டிச 19, 2024 04:28 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில்சாகுபடி துவங்கியது. விதைப்பு பணிகளை துவக்கிய போது பெய்த மழையால் நிலங்களில் தண்ணீர் தேங்கியதில் முளைப்பு தன்மையை இழந்தது. அதனை தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் விதைத்தனர்.
இந்நிலையில் பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் நிலங்களில் பயிர்கள் சாய்ந்தது. ஆர்.என்.ஆர், 16:38 போன்ற குறுகிய கால பயிர்கள் சேதமடைந்தது. வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வேளாண் துறை சார்பில் திருவாடானை தாலுகாவில் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று மழை நீர் தேங்கியதால் எந்த அளவிற்கு பாதிப்பு உள்ளது என்று கணக்கெடுக்கப்படுகிறது. தற்போது இரு நாட்களாக மழை இல்லை. இதனால் வயல்களில் தேங்கியுள்ள நீர் வற்றத் துவங்கியுள்ளது.
மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில் சேதம் ஏற்படும். டிச.25க்கு பின் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனர்.

