/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூ.11 கோடி திருப்பி அனுப்பிய அவலம்
/
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூ.11 கோடி திருப்பி அனுப்பிய அவலம்
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூ.11 கோடி திருப்பி அனுப்பிய அவலம்
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூ.11 கோடி திருப்பி அனுப்பிய அவலம்
ADDED : பிப் 28, 2024 06:00 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.11 கோடியை மீண்டும் அந்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பிய அவலம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு காலங்களில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர் பாதிப்பிற்கு இழப்பீடாக பெறப்பட்ட ரூ.11 கோடி எந்த விவசாயிகளுக்கு சேரவேண்டியது என்பது தெரியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட அந்த இழப்பீட்டுத்தொகை ரூ.11 கோடியும் மீண்டும் அந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வேளாண் துறை நேர் முக உதவியாளர் தனுஷ்கோடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தற்போது காப்பீட்டுக்கு மத்திய அரசால் தனி போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் திட்டம் கடந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பயிர் காப்பீட்டுக்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய ரூ.11 கோடி விவசாயிகளின் கணக்குகள் தெரியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்று இருக்காது.
இதற்காக வேளாண் துறையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தனி போர்ட்டல் துவக்கப்பட்டுள்ளதால் இது போன்ற தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என்றார்.
கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை கிடைக்காமல் விவசாயிகள் இன்னமும் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இதுபோல் விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

