ADDED : நவ 13, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு டிச.,1 வரை விவசாயிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (நவ.,13) மாலை முதல் பிரதமரின் பயிர் காப்பீட்டு சர்வர் முடங்கியதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் பொது சேவை மையங்களில் விவசாயிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
