நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 132 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. நெற்பயிருக்கு ஜன.,13 வரை 50 ஆயிரத்து 867 விவசாயிகளுக்கு ரூ.363.20 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான பயிர்கடன் ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்கள் உட்பட தகுதியுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயிர் கடன் பெறலாம்.