/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி அருகே துார்வாரப்படாத ஓடையால் வயலில் தேங்கும் நீர் பயிர்கள் அழுகும் நிலை
/
சாயல்குடி அருகே துார்வாரப்படாத ஓடையால் வயலில் தேங்கும் நீர் பயிர்கள் அழுகும் நிலை
சாயல்குடி அருகே துார்வாரப்படாத ஓடையால் வயலில் தேங்கும் நீர் பயிர்கள் அழுகும் நிலை
சாயல்குடி அருகே துார்வாரப்படாத ஓடையால் வயலில் தேங்கும் நீர் பயிர்கள் அழுகும் நிலை
ADDED : ஜன 01, 2025 07:48 AM
சாயல்குடி : சாயல்குடியில் இருந்து மூக்கையூர் செல்லும் சாலையில் முறையாக ஓடை துார்வாரப்படாததால் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாயல்குடி அருகே மூக்கையூர் சிற்றோடை செல்லும் வழியில் 60 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் பெருவாரியான வெள்ள நீர் ஓடை வழியாக செல்ல வழியின்றி அப்படியே தேங்கியுள்ளது.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீரை அப்புறப்படுத்த வழியின்றி வேதனையில் உள்ளனர். சாயல்குடியை சேர்ந்த விவசாயிகள் தங்கையா, கோட்டையன், வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாக சிற்றோடை துார்வாரப்படாமல் துார்ந்து போனது. இதனால் வழக்கமாக செல்லும் ஓடையின் வழித்தடத்தில் தண்ணீர் வெளியேறி அருகில் நெல் வயல்களில் 3 முதல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
சிற்றோடையை முறையாக துார் வாரினால் மூக்கையூர் கடலுக்குச் செல்ல வேண்டிய தரவை வழியாக உபரி நீர் வெளியே செல்லும். தற்போது அதற்கும் வழியின்றி சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் ஓடை துார்ந்து போனது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளோம்.
எனவே பாதிப்பை சந்தித்த விவசாயிகளுக்கு கடலாடி வருவாய் துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் சிற்றோடையை துார் வாறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என்றனர்.

