/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் மக்கள் அலைக்கழிப்பு
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் மக்கள் அலைக்கழிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் மக்கள் அலைக்கழிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் மக்கள் அலைக்கழிப்பு
ADDED : ஜன 29, 2024 11:51 PM
ராமநாதபுரம் --ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அனைத்து வசதிகளின்றி எக்ஸ்ரே எடுப்பதற்காக நோயாளிகளை இன்று போய் நாளை வா, என அலைக்கழிப்புசெய்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு செயல்படுகிறது. இங்கு டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் உள்ளது. இதன் செயல்பாட்டுக்கு குளிர் சாதன வசதி செய்ய வேண்டும். குளிர் சாதன இயந்திரம் பல மாதங்களாக பழுதாகி பயன்படாமல் உள்ளது.
இதன் காரணமாக நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் போதே இந்த இயந்திரம் செயல்படாமல் போய் விடுகிறது.
மீண்டும் இயந்திரத்தை இயக்கி எக்ஸ்ரே எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. மின் தடை ஏற்பட்டால் இன்வெர்ட்டர் மூலம் எக்ஸ்ரே இயந்திரம் செயல்படும். இந்த இன்வெர்ட்டர் பழுதாகியுள்ளது.
மின் தடை ஏற்பட்டால் அடுத்த மின்சாரம் வந்த பின்பு 4 மணி நேரம் கழித்து தான் எக்ஸ்ரே எடுக்க முடியும், என நோயாளிகளை நாளை வருமாறு திருப்பி அனுப்புகின்றனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 60 முதல் 80 வரை எக்ஸ்ரே எடுக்கும் நிலையில் அதற்கான சிறு, சிறு பராமரிப்பு செலவுகள் கூட அரசு மருத்தவமனை நிர்வாகம் செய்யாததால் ஏழை நோயாளிகள் வேறு வழியின்றி தனியார் எக்ஸ்ரே மையங்களில் பணம் கொடுத்து எக்ஸ்ரே எடுக்கும் நிலை உள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எக்ஸ்ரே இயந்திரங்கள் தொய்வின்றி செயல்பட தேவையான பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்.----