ADDED : ஜூன் 28, 2025 11:31 PM
சாயல்குடி: சாயல்குடி நகரின் பிரதான சாலையான அருப்புக்கோட்டை செல்லும் சாலை, துாத்துக்குடி சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்டவையில் தொடர் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் டூவீலர்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் சாயல்குடி வாரச்சந்தை நடந்து வரும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சாலைகளில் குறிப்பிட்ட இடங்களை தாண்டி ரோட்டோரங்களில் அதிகளவு கடைகளை விரிப்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளை கடந்து செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.