/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறண்ட பூமியில் வாசனை மிகுந்த மல்லிகை சாகுபடி: புவிசார் குறியீடு வழங்க வலியுறுத்தல்
/
வறண்ட பூமியில் வாசனை மிகுந்த மல்லிகை சாகுபடி: புவிசார் குறியீடு வழங்க வலியுறுத்தல்
வறண்ட பூமியில் வாசனை மிகுந்த மல்லிகை சாகுபடி: புவிசார் குறியீடு வழங்க வலியுறுத்தல்
வறண்ட பூமியில் வாசனை மிகுந்த மல்லிகை சாகுபடி: புவிசார் குறியீடு வழங்க வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2025 03:52 AM

ராமநாதபுரம்:  வறண்ட பூமி என அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்று அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக மணம், மகசூலில் தனித்துவம் கொண்டதால் தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்து வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து மல்லிகை நாற்றுகள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு பெறு வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மல்லிகை 'குண்டு மல்லி' என்று அழைக்கப்படுகிறது. மல்லிகை என்றால் மதுரை தான் என்ற அளவில் அங்கு விளைந்தாலும் இப்பூவின் பிறப்பிடமாக வறட்சி மாவட்டமான ராமநாத புரம் அருகேயுள்ள மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகள் விளங்குகின்றன.  ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் உள்ளது.
ஆண்டுதோறும் நெல், பருத்தி, மிளகாய், உளுந்து, கேழ்வரகு என 5 லட்சம் ஏக்கருக்கும் மேல்  விவசாயம் நடக்கிறது. இத்துடன் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் வெற்றிலை, காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக தங்கச்சிமடம், மண்டபம் பகுதி யில்  மல்லிகை நாற்று உற்பத்தி செய்கின்றனர்.
வாசனை மிகுந்த மல்லிகை ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம், தங்கச்சிமடம் அமைந்துள்ளது. அருகே கடல் பகுதி இருந்தாலும் இவ்வூரைச் சுற்றிலும் நல்ல சுவையான தண்ணீர் கிடைக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடந்தது.
அப்போது ஒருவர் தனது வீட்டிற்காக மல்லிகை நாற்று தாய் பதியம் வாங்கி வந்து வளர்த்தார். நன்றாக வளர்ந்து பூத்து குலுங்கியது. இதனை பார்த்தவர்கள் தாய் பதியத்தை வெட்டி அவர்களது வீட்டிலும் மல்லி நாற்றுகளை வளர்க்க தொடங்கினர்.
வெளியூர்களை காட்டி லும் நன்றாக வளர்ந்து வாசனை மிகுதியாக உள்ளதை கண்டறிந்த வியாபாரிகள் மல்லிகை நாற்றுகளை வாங்க குவிந்தனர். இதன் காரணாக தற்போது மண்டபம் அருகே  தங்கச்சிமடம், அக்காள் மடம், பேக்கரும்பு, நொச்சியூருணி பகுதிகளில் ஏராளமான வர்கள் மல்லிகை நாற்று உற்பத்தி செய்கின்றனர்.
மல்லிகை நாற்று உற்பத்தி முறை இப்பகுதியின் சுவையான தண்ணீர், மல்லிகை செடிக்கு ஏற்ற உதிர்ந்து இறுகும் மண் ஆகிய வற்றின் காரணமாக நாற்றுகள் தரமாக உள்ளன. 10 சென்ட் இடத்தில் ஒரு லட்சம் நாற்றுகள் பதியமிடலாம். மல்லிகை நாற்றுக்கு முருங்கை கம்பு ஊன்றி பந்தல் அமைத்து, சுற்றிலும் தென்னை ஓலை அமைத்தும் குளிர்ந்த நிலையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
45 நாட்களில் செடி வளர்ந்த பிறகு வெட்டி பிரித்தெடுக்க வேண்டும். 2.5 அடி குத்து பதியம், ஒரு வரிசைக்கு 1000 நடலாம். தாய் பதியம் பூக்க ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மல்லிகை நாற்று உற்பத்தி மற்றும் நறுமணம், தரம் அடிப்படையில் மண்டபம், தங்கச்சி மடம் மல்லிகை நாற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என விவ சாயிகள், வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.

