ADDED : ஆக 24, 2026 06:43 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காற்றுடன் மழை பெய்யும் போது நகர், புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சிறிது நேரம் பலத்த காற்று, மழை பெய்தால் நகர், புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்த புகாரில் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரி செய்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று மதியம் 2:15 மணிக்கு நகரில் பலத்த காற்றுடன் சிறிது நேரம் மழை பெய்தது. அப்போது 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மாலை 6:00மணி வரை தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மாதந்தோறும் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்தடை செய்யும் போது டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதாகும் பிரச்னைக்கு நிரந்ததர தீர்வு காண மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.––––
